News Just In

7/08/2021 09:06:00 PM

கிழக்கு மாகாணத்தில் உறுதியானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான விவசாய கலாச்சாரத்தை செயற்படுத்துவது தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு...!!


கிழக்கு மாகாணத்தில் உறுதியானதும் நிலைத்து நிற்கக்கூடியதுமான விவசாய கலாச்சாரத்தை செயற்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டத்தின் அரச திணைக்களங்களினதும் கூட்டுத்தாபனங்களினதும் உயரதிகாரிகளுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு நேற்று(07) மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஸித்த பி வணிக சங்கவின் தலைமை மற்றும் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மூன்று அரசாங்க அதிபர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் சேதன பசளையின் பயன்பாடு, சேதன பசளை தயாரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான சேதனப்பசளை பயன்பாடு தொடர்பாக விளக்கமளித்தல் போன்ற நிலைபேறான விவசாய கலாச்சாரத்தை பேண மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.











No comments: