News Just In

7/08/2021 08:06:00 PM

ஒரு தனி நபருக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை செல்வாக்கு செலுத்தியது என்பது ஜனநாயகமா என்ற கேள்வி? இலங்கையில் எழுந்துள்ளது!!


கட்சி அங்கத்துவத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தில் ஒரு தனி நபருக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை செல்வாக்கு செலுத்தியது என்பது ஜனநாயகமா என்ற கேள்வி இலங்கையில் எழுந்துள்ளது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு ஊடா மன்றத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளர்.

அவர் இங்கு மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் புதிய அமைச்சரின் வருகையின் பின் தமிழ் மக்கள் எழுச்சி பெறுவார்களா என்ற கேள்வியும் இருக்கின்றது. ஆனால் எழுழ்ச்சி பெற வைக்கவேண்டும். பசில் ராஜபக்ஷயின் வருகையினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதாக இருந்தால் எந்த விதமான ஒரு பிரயோசனமும் இல்லை என்றே கூற முடியும்.

இலங்கை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கின்றது கடந்த காலத்தில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கக் கூடாது இதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது இருந்தபோதிலும் புதிய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தில்இதை எதிர்த்த பலர் இருக்கின்றனர் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களை மதத்தலைவர்கள் எதிர்த்தார்கள் என்பதும் எமக்கு தெரியும்.

ஆனால் தன்னுடைய தேவைகளுக்காக கட்சி அங்கத்துவத்தை பலப்படுத்த செய்ய வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தில் ஒரு தனி நபருக்காக மூன்றிலிரண்டு பெரும்பான்மை செல்வாக்கு செலுத்தியது என்பது ஜனநாயகமா என்ற கேள்வியே இலங்கையில் எழுந்துள்ளது .

இதே இரட்டை பிரஜாவுரிமை என்பது எல்லாருக்கும் சமமாக பர்க்க படவேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சில விடயங்களை ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் இந்த மாகாணசபை தேர்தல் முறைமையை இல்லாமல் செய்து புதிய புதிய முறைமைகளை அரசாங்க நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாக அறிய முடிகின்றது.

வடக்கு - கிழக்கு முழு இலங்கையிலும் சிறுபான்மையினரை பொறுத்தவரையில் விகிதாசார முறைமை தேர்தலே அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .

No comments: