முனைப்பு சுவிஸ் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் உலருணவு நிவாரணப் பணி ஆனது முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் செயலாளர் இ.குகநாதன் பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு நகர்பகுதியில் ஜசகம் செய்வோர் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் பாதணிகள் பழுதுபார்க்கும் சேவையில் ஈடுபவோருக்கும் உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
அதேபோன்று வாகரை வாகனேரிக் கிராமத்தில் தொழில் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் வாவுணதீவுப் பிரதேசத்தில் ஊத்துமடு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதுடன், அனாதரவற்ற மக்களை தேடி ஆதரவு வழங்குவதுடன், தொழில் முனைவேருக்கு சுயதொழில் சார் உதவிகளையும் முனைப்பு நிறுவனம் மாவட்டம் பூராகவும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: