News Just In

7/01/2021 07:34:00 AM

"அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்" தொடர்பான கலந்துரையாடல்...!!


'அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்' என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் குறியீட்டு எண் 16 இன் படி , ' சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்' நிலையான அபிவிருத்திக்கு அமைதியான மற்றும் முழுமையான சமுதாயத்தை உருவாக்குவதையும், அனைவருக்கும் நீதிக்கான வாய்ப்பையும், இலங்கையில் அனைத்து மட்டங்களிலும் பொறுப்புடன் கடமையாற்றும் முழுமையான நிறுவனங்களை திறம்பட உருவாக்குவதையும் ஊக்குவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலிசப்ரி தலைமையில் நீதி அமைச்சு மற்றும் நிலையான அபிவிருத்தி சபை அனுசரணையில் நேற்று (2021.06.30) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில்,
'அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்' என்ற கருத்தில் நிலையான அபிவிருத்திக்கான அளவுகோல்களை அடைவதற்கும், ஒரு பொறிமுறையை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும், நீதித்துறையுடன் தொடர்புடைய எதிர்கால திட்டங்களை வகுத்து ஒருங்கிணைப்பதற்காகவும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பெறுவதற்கான சட்டதிருத்தம் தொடர்பான முயற்சிகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயதுன்னே, நிலையான அபிவிருத்தி சபை நிர்வாக இயக்குநர் திருமதி சமீந்தி சப்ரமடு உட்பட பல அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





No comments: