மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
செங்கலடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேருக்கும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும்
வெல்லாவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும்
பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்குமாக இன்று மாத்திரம் 50 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன் மட்டக்களப்பு உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் இதுவரை 43572 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடவை 18881 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: