News Just In

6/04/2021 08:02:00 PM

தெற்கு அமெரிக்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு தற்காலிக தடை...!!


இலங்கையிலிருந்து கடந்த 14 நாட்களினுள் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் மீண்டும் வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்கிரம இதனை தெரிவித்துள்ளார்.

இதனை அனைத்து விமான சேவைகளுக்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு சென்ற பயணிகளுக்கு இதற்கு முன்னர் விதித்திருந்த தற்காலிக தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: