News Just In

6/06/2021 03:15:00 PM

நீர் கட்டணம் செலுத்துவதற்கு சலுகை காலம் வழங்க தீர்மானம்...!!


கொரோனா தொற்று நிலையை கருத்தில் கொண்டு நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: