News Just In

6/24/2021 10:51:00 AM

மட்டக்களப்பு நகரில் ஏற்பட்ட மினி சூறாவளி- வீதி போக்குவரத்து பாதிப்பு; மின்சாரம் தடை- சீர்செய்யும் பணிகளில் மாநகர சபை...!!


மட்டக்களப்பு- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் நேற்றையதினம் இரவு திடீர் என ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பெய்த பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழ்த்துள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் பகுதியின் சில பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், மரங்கள் முறிந்து சில பாதைகளில் விழுந்துள்ளமையால் பாதைகளினுடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, சுற்று மதில்கள் உடைந்தும், வீடுகளின் கூரைகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த மரங்களை வீதிகளில் இருந்து அகற்றும் பணிகளை மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் மற்றும் மின்சாரசபை ஊழியர்கள், மாநகரசபை அனர்த்த முகாமைத்துவ குழு ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை ஆணையாளர் தயாபரன், மாநகர பிரதி ஆணையாளர் ஆகியோரின் தலைமையில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குறித்த காற்றினால் முறிந்த மரங்களை அகற்றி மக்களின் போக்குவரத்து சிரமத்தை சீர் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் மாநகர முதல்வருடன் மாநகர உறுப்பினர்களான S.ஜெயா மற்றும் T.இராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் குறித்த நடவடிக்கையினை பார்வையிட்டனர்.


















No comments: