News Just In

6/04/2021 07:40:00 AM

சாய்ந்தமருதில் பிந்திய இரவிலும் கொரோனா ஒழிப்புக்காக களப்பணியாற்றும் சுகாதார நடவடிக்கை குழு...!!


நூருல் ஹுதா உமர்
இலங்கையில் மிகவேகமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அலையின் தாக்கம் கிழக்கிலும் தினந்தோறும் அதிகரித்துவரும் அச்சநிலை உள்ளதனால் மக்களை வழிப்படுத்தி கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதார தரப்பினர் கடுமையான களப்பணியை நாடுபூராகவும் செய்துவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் அவர்களின் நெறிப்படுத்தலில் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எம்.பைசல் முஸ்தபா அவர்களின் தலைமையில் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர்களும் கலந்து கொண்டு இன்று (02) பிந்திய இரவுகளிலும் களப்பணியாற்றி வருகிறார்கள்.

கொவிட்-19 பரவலை சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாக சாய்ந்தமருதில் இன்று உள்ளூர் மற்றும் பிரதான வீதிகளில் இந்த குழுவினரினால் கள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அத்துடன் வாகனங்கள் அத்தியவசியத் தேவைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளனவா என்றும் பரிசீலிக்கப்பட்டதுடன் மருந்தாக உரிமையாளர்களுக்கும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவேண்டிய அவசியத்தை இதன்போது வலியுறுத்தினார். மேலும் பாதுகாப்பு படையினர்கள், பொலிஸார் இணைந்து பிரதேச வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments: