News Just In

6/02/2021 08:24:00 PM

வீட்டுக் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்பு...!!


கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் இன்று(2) வீட்டுக் கிணற்றில் இருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்தநிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் தனிமையில் வசித்துவந்த நிலையிலேயே இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிணற்றில் சடலமாக இனங்காணப்பட்டுள்ளார்.

வேலாயுதம் பரமேஸ்வரி எனும் 74 வயதுடைய வயோதிப பெண்ணே மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தற்கொலையா, கொலையா அல்லது தவறி வீழ்ந்து உயிரிழந்தாரா என்ற விதத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments: