News Just In

6/05/2021 11:04:00 AM

ஓட்டமாவடிக்கு கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை கொண்டு சென்ற வாகனம் விபத்து- பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!!


ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி வரை கொவிட் சடலம் ஒன்றை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற வேன் வாகனம் ஒன்று இன்று (05) காலை விபத்துக்கு உள்ளாகி கவிழ்ந்துள்ளது.

வாகனத்தில் ஹட்டன் பொலிஸின் 4 அதிகாரிகளும், மேலும் 2 நபர்களும் மற்றும் சாரதியும் இருந்துள்ளனர்.

குறித்த வேன் வாகனம் ஹட்டன் மற்றும் கினிகத்தேனைக்கு இடையில் 59 ஆவது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் வேனில் பயணித்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய நபர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 7 மணி அளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 79 வயதுடைய பெண் ஒருவரின் சடலத்தை இன்று (05) ஹட்டனில் இருந்து ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சடலம் கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











No comments: