News Just In

6/04/2021 11:36:00 AM

கிண்ணியா பிரதேச மகமார் கொரோனா மையவாடி சம்பந்தமாக விஷேட சந்திப்பு...!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகமார் மையவாடியின் செயற்பாடு இடை நிறுத்தப்பட்டது தொடர்பாக ஆராய்யும் விசேட சந்திப்பு கிண்ணியா பிரதேச செயலாளர் முகம்மட் கனி தலைமையில் நேற்றிரவு(3) நடைபெற்றது.

கிண்ணியா பிரதேசத்தில் கொவிட் 19 ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக கிண்ணியா பிரதேச செயலாளர், கிண்ணியா சுகாதார பிரிவு,பாராளுமன்ற உறுப்பினர்கள் ,உலமா சபையினர் மற்றும் அரசியல் வாதிகள் சிவில் அமைப்புக்கள் என பலரது முயற்சியும் கோரிக்கைக்கும் அமைவாக கிண்ணியா மகமார் மையவாடிக்கான அனுமதி கிடைத்த நிலையில் நடைமுறை படுத்தலில் சில தடைகள் உள்ளதாகவும்,பின்பு இதனை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துக்கோரலவின் கவனத்திற்கு அவரின் இணைப்பாளரும் கந்தளாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் ஊடாக கொண்டு செல்லப்படுவதற்காக இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அதுகொரல தற்போது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருவதனால் அவருடைய இணைப்பு செயலாளரும், கந்தளாய் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.சி.எம். ஜவாஹிரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடல் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி டாக்டர் ஜிப்ரி, பிரதேச செயலாளர் எம். கனி, சுகாதார வைத்தியதிகாரி வைத்தியர் றிஸ்வி நகர சபை உறுப்பினர்களான ஏ.எம். மஸ்தி, சட்டத்தரணி முகம்மட் ராபி உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.


No comments: