News Just In

6/03/2021 04:09:00 PM

டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக் நியமனம்...!!


இலங்கையின் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நாமல் ராஜபக்ஷ இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (03) காலை அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு இந்த இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

No comments: