News Just In

6/05/2021 07:36:00 AM

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு- 5000ரூபாய் பரிசு தொகை வெல்ல அரிய வாய்ப்பு...!!


நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் டெங்கு ஒழிப்பு வேலைதிட்டத்தினை முன்னெடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய தினம் உலக சுற்றாடல் தினம் என்பதனால் இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு சுற்றாடல் தினத்திற்கான எந்தவித நிகழ்வுகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் சுற்றாடல் அமைச்சு, தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்று மற்றும் நாளைய தினங்களில் வீட்டின் சுற்றுபுறச்சூழலை சுத்தம் நடவடிக்கையினை காணொளியாக பதிவு செய்து சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு பாடசாலை சிறுவர்களிடம் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய குறித்த நாட்களில் ஒவ்வொரு மணித்தியாலமும் 3 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு 5 ஆயிரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: