News Just In

6/03/2021 01:23:00 PM

ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 33பேர் பயணித்த பேருந்தில் 18பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


ஹப்புத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டரத்மலே, தொடலாகல மற்றும் தபேதென்ன ஆகிய தேயிலை தோட்டங்களில் வசிக்கும் ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சேவையாற்றும் குறித்த ஊழியர்கள் ஒரே பேருந்தில் ஹப்புத்தளையில் இருந்து பலங்கொட பகுதிக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் பயணித்த 33 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments: