News Just In

6/04/2021 10:06:00 PM

சம்மாந்துறை- புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தில் 3 தினங்களில் 56 கொரோனா நோயாளர்கள் அடையாளம்...!!


சம்மாந்துறை- புதிய வளத்தாப்பிட்டி கிராமத்தின் சில பகுதிகளில் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை நடவடிக்கையில் மொத்தமாக 56 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இப்பகுதியில் இன்று (04) எழுமாற்றாக எடுக்கப்பட்ட சுமார் 105 பரிசோதனைகளில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த பகுதியில் சடுதியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதனை அடுத்து புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்வீதிகள் தடை செய்யப்பட்டு இராணுவம் பொலிஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று (03) முதல் முடக்கப்பட்ட இப்பகுதியில் 47 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக சம்மாந்துறை புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்து வருகின்றமையால் இப்பிரதேசத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மூன்று தினங்களுக்குள் இப்பிரதேசத்தில் 47 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இப்பகுதியில் கொரோனா தொற்றுக் காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ள நிலையிலேயே இப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனாவினால் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (3) எழுமாறாக எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணனும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments: