News Just In

6/08/2021 08:23:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதற்கட்டமாக 1351 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(08) மொத்தமாக 1351கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ட் மகளிர் உயர் தர தேசிய பாடசாலையில் 737நபர்களுக்கு குறித்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசிகளை மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள், மாநகர சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், செங்கலடி சுகாதார அதிகாரி பிரிவில் 136பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது. இதனை பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் தபால் திணைக்கள உத்தியோகஸ்தர்களும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 154பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 196பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 58பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள் பெற்றுக்கொண்டனர்.

அதேவேளை, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 70பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் அடிப்படையில், இன்று மொத்தமாக 1351கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அரசாங்கத்தால் 25000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தடுப்பூசி திட்டத்தில் முதற்கட்டமாக பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், மாநகர உள்ளூராட்சி மன்ற உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட மக்களுடன் நேரடித் தொடர்பினை பேணுபவர்களுக்கு ஏற்றப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: