News Just In

5/17/2021 04:08:00 PM

இலங்கைக்கான பங்களாதேஷ் நாட்டின் உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்...!!


இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் திரு.தாரிக் அரிஃபுல் இஸ்லாம் அவர்கள், கௌரவ சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

இரு நாடுகளிலும் காணப்படும் கொவிட் தொற்றுநோய் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. எப்பொழுதும் இலங்கையின் நட்பு நாடாக விளங்கும் பங்களாதேஷ் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார்.

இலங்கையின் கைத்தறி தொழில்துறையின் அபிவிருத்தி மற்றும் நுண்நிதி கடன் விவகாரங்கள் போன்ற விடயங்களில் வழிகாட்டல்களை வழங்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார்.
பல துறைகளில் குறிப்பாக ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பல்வேறு இலங்கையர்கள் உயர் பதவிகளை வகிப்பதன் ஊடாக பங்களாதேஷின் பொருளாதாரத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் உயர்ஸ்தானிகர் பாராட்டைத் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை-பங்களாதேஷ் நட்புறவு சங்கத்தை அமைப்பது கொவிட் சூழல் காரணமாக காலதாமதமாவதாகவும், இதன் பின்னர் இரு நாட்டு உறவுகள் பலப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.




No comments: