News Just In

5/21/2021 09:15:00 AM

கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் மதில் மீதேறி தப்பி ஓட்டம்...!!


கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் களுத்துறை - நாகொட வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலையின் மதில் மீதேறி அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுறுதியாகி வீடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதற்கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான ஆலோசனைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

விசேட குழுவொன்றினால் இந்த ஆலோசனை அடங்கிய அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

No comments: