News Just In

5/24/2021 10:51:00 AM

நோயாளிக்கு மருந்து எடுத்துச் செல்லும் போர்வையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற நபர் கைது...!!


நோயாளி ஒருவருக்கு மருந்து எடுத்துச் செல்லும் போர்வையில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இங்கிரிய - கெட்டகெதல்ல சாலைத் தடையில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இவரது வாகனத்திலிருந்து 05 கிராம் ஹெரோயின் மற்றும் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்தறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments: