News Just In

5/19/2021 06:04:00 PM

வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை...!!


நாளை மறுதினம் (21) நள்ளிரவு முதல் எதிர்வரும் 31ஆம் திகதி நள்ளிரவு வரை வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியும் என அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் சரக்கு விமானங்களின் சேவை தொடரும் என்பதோடு, சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments: