News Just In

5/25/2021 04:42:00 PM

கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு...!!


இலங்கையில் கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி ஏற்றுவதே தீர்வு எனும் நிலைமையின் கீழ், மிகவும் விரைவாக தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டியுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 60 - 70 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அதற்கமைய, துரிதமாக 14 மில்லியன்கள் சைனோபார்ம் தடுப்பூசிகளை சீனாவின் குறித்த உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும், 01 மில்லியன் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கும் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மேலும் 30 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கான தினத்தை சீன நிறுவனம் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதற்கமை ஜூன் மாதமளவில் குறிப்பிடத்தக்களவு தடுப்பூசிகளை கொள்வனவு செய்து அவற்றை நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல் மாகாணத்தில் மாத்திரமின்றி, குருணாகல், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற மாகாணங்களை இலக்காகக் கொண்டு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றார்.

No comments: