கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் உணவுப்பொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இந்த தடை தாக்கம் செலுத்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையிலும் நடமாட்டங்களுக்கும் தடைவிதிக்கப்படவுள்ளது.
குறித்த நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் விமான நிலையம் செல்லவும், நோயாளர்களை இடமாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments: