News Just In

5/08/2021 01:30:00 PM

இந்தியாவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம்...!!


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவருக்கு மேற்கொண்ட பரிசோதனை மாதிரிகளில் அவர் இந்தியாவில் பரவி வரும் B1.617 என்ற வகை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவரின் பரிசோதனை மாதிரியிலேயே இவ்வாறு புதிய வகை வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த ஒருவருக்கே முதன் முறையாக இந்த வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

No comments: