News Just In

5/10/2021 04:00:00 PM

சொத்துக்காக மகனால் கொல்லப்பட்ட தந்தை- வேயங்கொட பகுதியில் சம்பவம்!!


வேயங்கொட பகுதியில் தனது 67 வயதுடைய தந்தையை கொலை செய்ததாக சந்தேகத்தில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய மகன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது சகோதரன் தள்ளிவிட்டதில் தந்தை உயிரிழந்ததாக உயிரிழந்தவரின் மகள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த குறித்த மகன் தன்னுடைய சகோதரிக்கு எவ்வித சொத்துக்களையும் வழங்க வேண்டாம் என தெரிவித்து தந்தையை தள்ளிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காயங்களுக்கு உள்ளான தந்தை வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் பிள்ளைகளினால் பெற்றோர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் 4 பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments: