News Just In

5/12/2021 02:27:00 PM

மட்டக்களப்பு- செங்கலடி Arpico insurance கட்டிடத்தொகுதியில் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு சுற்றிவளைப்பு- 14 பேர் தனிமைப்படுத்தலில்!!


(செங்கலடி நிருபர் சுபா)
செங்கலடி பிரதான வீதியில் உள்ள Arpico insurance கட்டிடத்தொகுதியில் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு! சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசார்.

Arpico insurance முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் அங்கிருந்த 14பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இன்று காலை செங்கலடி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு என கிடைத்த தகவலையடுத்தே செங்கலடி பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.தவேந்திரராஜா அவர்களின் தலைமையில் ஏறாவூர் பொலிசாருடன் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.






No comments: