News Just In

5/24/2021 04:05:00 PM

பயணக்கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு...!!


இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாளைய தினம், எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக நடமாட்ட கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


No comments: