News Just In

5/12/2021 07:31:00 AM

கடந்த 24 மணி நேரத்தில் 435பேர் கைது- கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8299ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் 8,299 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.





No comments: