News Just In

5/18/2021 09:41:00 AM

நேற்று மேலும் 19 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு- மொத்த எண்ணிக்கை 981ஆக அதிகரிப்பு!!


நாட்டில் 2021 மே மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (17) உறுதி செய்துள்ளார். அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆகும்.

01. பொரலஸ்கமுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மூச்சிழுப்பு நோய் நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

02. மெதகீபிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 14 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 15 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

04. மக்கொன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 15 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

05. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 14 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய், இதயநோய் மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06. பயாகல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 13 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய ஆண் ஒருவர், மீரிகம ஆதார வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பெண் ஒருவர், ஹிக்கடுவ கொவிட் சிகிச்சை நிலையத்தில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. ரம்புக்கன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 89 வயதுடைய ஆண் ஒருவர், கேகாலை போதனா வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. பொல்கொல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 15 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. கட்டுவன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 54 வயதுடைய ஆண் ஒருவர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. பாதுக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. தம்புள்ள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 63 வயதுடைய ஆண் ஒருவர், வெலிக்கந்த விசேட சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 17 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. தெனிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய பெண் ஒருவர், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. ஹப்புகஸ்தலாவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 10 ஆம் திகதி நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. உடபிட்டிவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய ஆண் ஒருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 16 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா, நீரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் வலிப்பு போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

19. கடுவெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 12 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments: