கொரோனா தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புடைய 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு தொற்றுநீக்கம் செய்யப்பட்டதன் பின்னரே புதிய காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன்,மாவனெல்லை காவல்நிலையத்தில் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியாகியதை அடுத்து குறித்த காவல்நிலையத்தின் 76 அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, மாவனெல்லை காவல் நிலையத்தின் செயற்பாடுகளுக்காக மேலதிக காவல்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: