இந்த விடயம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனடிப்படையிலான முன்மொழிவு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டில் தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு சராசரியாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவதாக மனுஜ் சி வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது பதிவு செய்யப்படுவதை விட இரண்டு மடங்குகளாக அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை அறிவியல் ரீதியில் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் போது குறைந்த பட்சம் 14 நாட்கள் கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமெனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் மனுஜ் சி வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: