News Just In

5/03/2021 04:22:00 PM

மட்டக்களப்பு நகரில் 120 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை- பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


மட்டககளப்பு நகர்பகுதியில் கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட திசவீரசிங்கம் சதுக்கம் மேற்கு பகுதியில் 50 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்தபகுதியில் ஏழுமாறாக 120 பேருக்கு பெறப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேதேசத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து குறித்த பகுதியிலுள்ள 3 வீதிககளை சேர்ந்த சுமார் 40 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் முடக்கப்பட்டு அப் பகுதியில் இராணுவத்தினர் ,பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந் நிலையில் இன்று முடக்கப்பட்ட பகுதியிலுள்ளவர்களை வீடு வீடாக சுகாதார அதிகாரிகள் சென்று 50 பேருக்கு பி.ரி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள கூளாவடி வீதியில் பிரயாணித்தேரை வழிமறித்து எழுமாறாக அன்டிஜன் பரிசோதனையினை மேற்கொண்டனர். இதன்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுத்துவருவதாகவும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: