News Just In

5/10/2021 02:35:00 PM

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு அன்டிஜன் பரிசோதனை- ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் உட்பட 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!!


நாட்டில் அதிவேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை விசேட காவல்துறை சோதனை நடவடிக்கையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டவில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் சுகாதார துறையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சுகாதார விதிமுறைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காத 110 ற்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காந்தி பூங்காவில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் எட்டுப்பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்கியுள்ளதுடன், இருதயபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

இத்துடன்  மாவட்டத்தின் நகர் பகுதிகளில் அதிக சன நடமாட்டம் நிலவும் பகுதிகளில் கிருமி நாசினி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















No comments: