News Just In

5/21/2021 07:27:00 AM

மட்டக்களப்பு உள்ளிட்ட 03 மாவட்டங்களை சேர்ந்த 09 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...!!


நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 3 மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தின் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தின் செவனகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவௌ, செவனகல, பஹிராவ, ஹபரத்தவெல, ஹபருகல, மஹாம, இதிகொலபெலஸ்ஸ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, 8 மாவட்டங்களில் 28 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

No comments: