அக்கரைப்பற்று மாநகர சபை,மொபிட்டெல் நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் SMS Gate Way மற்றும் மாநகர சபைக்கான நிரந்தர Hotline சேவைகளுக்கான் (24×7) அறிமுக நிகழ்வு நேற்று (31) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மொபிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் டில்ஷான் பெரேரா, சஜாத் கான், ருஸ்லி அஹமட் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அக்கரைப்பற்று மாநகர சபையானது பொதுமக்களுக்கு தமது வினைத்திறன் மிக்க சேவைகளை மென்மேலும் மேம்படுத்தவும்,சேவைகள் நிமித்தம் மக்களிடத்தில் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இவ்விசேட சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
No comments: