News Just In

4/17/2021 01:30:00 PM

புனித நோன்பை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டி!!


விடியல் லங்கா கலை மன்றம் புனித நோன்பை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான சித்திரப் போட்டியொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

குறித்த சித்திரப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக இடம்பெறுகின்றன. இதில் தரம் 02 தொடக்கம் தரம் 05 மாணவர்களுக்கான போட்டிகள், தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கான போட்டிகள், தரம் 12, 13 மாணவர்களுக்கானவையாக இடம்பெறுகின்றது.

சித்திரப் போட்டி தலைப்பானது 'இனங்களுக்கிடையிலான நல்லுறவு' அனைத்து பிரிவுகளுக்குமான சித்திரங்களும் மேற்படி கருப்பொருளை வெளிப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு பிரிவிற்கும் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். (சான்றிதழ்கள் பிரதேச செயலகத்துடன் இணைந்ததாக இருக்கும்), சித்திரங்கள் யாவும் ஏ3 கடதாசி அளவாக அமைந்திருத்தல் வேண்டும். எல்லாப் பிரிவினரும் சித்திரங்களை சோக் கலர் இல் நிறம் தீட்டியிருத்தல் வேண்டும்.

சித்திரங்களை போட்டிக்கு அனுப்புதல் உங்கள் சித்திரங்களின் தெளிவான புகைப்படம் 0768407884 என்ற வட்ஸ்அப் அல்லது wahabrasee@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். நிறம் தீட்டும் செயற்பாட்டின் 3 - 5 நிமிட வீடியோ பதிவு எமது 0768407884 என்ற வட்ஸ்அப் அல்லது wahabrasee@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும். உங்கள் சித்திரப் பிரதிகளில் உங்களின் பெயர், முகவரி, தரம், தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை குறிப்பிடுங்கள்.

வெற்றியாளர்களை தெரிவு செய்தல் எமது விஷேட முகநூல் மற்றும் யூடிப் பகுதியின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆதரவில் 35 வீத புள்ளிகள் வழங்கப்படும். அத்தோடு சித்திரக் கலைத்துறையின் நிபுணர்குழு 65 வீதமான புள்;ளிகளையும் மதிப்பீடு செய்து தெரிவு செய்யப்படுவீர்கள்.

No comments: