News Just In

4/10/2021 08:17:00 AM

விகிதாசார தேர்தல் முறைமை தொடரப்பட வேண்டும்- பெபரல் அமைப்பு கோரிக்கை!!


உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறைமையில் புதிதாக மீண்டும் திருத்தங்களை மேற்கொள்ளும் பட்சத்தில் விகிதாசார தேர்தல் முறைமை தொடரப்பட வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான அமைப்பான பெபரல் அமைப்பு கோரியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 வீதத்தினால் குறைவடைய வேண்டும் எனவும் பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள 25 வீத இட ஒதுக்கிடு அவ்வாறே தொடர வேண்டும் எனவும் பெபரல் அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொகுதிகளுக்கான விகிதாசார வீதமும் அதிகரிக்கப்பட வேண்டும் என பெபரல் அமைப்பின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை 18 வயது பூர்த்தியானவர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களை பதிவில் திருத்தம் என்ற அடிப்படையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் இந்த திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வருடத்துக்கு ஒருமுறை மாத்திரம் தயாரிக்கப்படும் வாக்களர் பதிவிற்கு மேலதிகமாக மூன்று துணைப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த சட்டமூலத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments: