News Just In

4/10/2021 07:01:00 PM

திருகோணமலை- குறிஞ்சாக்கேணி பால நிர்மாண வேலைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது!!


எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எம்.தௌபீக்கின் வேண்கோடுளுக்கமைய 750 மில்லியன் ரூபா செலவில் குறிஞ்சாக்கேணி பாலத்தினை புனர் நிர்மாணம் செய்வதற்கு உத்தியோகபூர்வமாக இன்று(10) கிராமிய வீதிகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கபில துவான் அத்துக்கொரல்ல, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸாக், குஞ்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ. முபாரக், மூதூர் பிரதேசபையின் தவிசாளார் அரூஸ்,கிண்ணியா பிரதேசபைத் தவிசாளார் கே.எம். நிகார், முன்னாள் கிண்ணயா நகரபிதா சட்டத்தரணி Dr. ஹில்மி மஹ்ரூப், முன்னாள் பிரதேச சபைத் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் பிரத்தியேக செயலாளருமான சனூஸ், மற்றும் கிண்ணியா நகர, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது குறிஞ்சாக்கேணி பாலத்திற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


No comments: