News Just In

4/27/2021 01:22:00 PM

பசில் ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பில் பொது ஜன பெரமுன ஏற்பாட்டில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன!!


(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் பிறந்த நாளை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் துணைத் தலைவருமான பரமசிவம் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் தேசிய மரநடுகையை முன்னிட்டு மரம் நாட்டு விழா மரக்கன்றுகள் வினியோகம் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கான இரத்தம் சேகரிப்பு இரத்ததான முகாம் என்பனவும் இடம்பெற்றன .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யின் இரத்த வங்கி வைத்திய அதிகாரி திருமதி கீர்த்திகா மதனழகன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கொவிட் 1 9 சுகாதார வழி முறைகளுக்கமைய பங்கேற்றனர்.

இங்கு கருத்து வெளியிட்ட மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதி காலத்தில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றுதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.







No comments: