News Just In

4/27/2021 01:51:00 PM

நாடு பூராகவும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடத் தீர்மானம்!!


இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: