News Just In

4/03/2021 01:50:00 PM

இளைஞர்களுக்கு பாலியல் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!


(மாளிகைக்காடு நிருபர்)

பாலியல் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல் மற்றும் பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களிலிருந்து முற்றாக காத்தல் ஆகிய செயற்பாடுகளில் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெறும் நோக்கில் இளைஞர்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி இன்று (03) காலை இலங்கை ஐக்கிய சமூக முன்னணியின் ஏற்பட்டில் அமைப்பின் தலைவரும், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. கபூர் அன்வர் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய பாலியல் நோய்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.என்.எம். தில்ஷான் பாலியல் ஆரோக்கியத்தை ஊக்குவித்தல் மற்றும் பாலியல் ரீதியாக கடத்தப்படும் நோய்களிலிருந்து முற்றாக காத்தல் தொடர்பிலான விரிவுரை நிகழ்த்தினார்.

மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஸ்மி காரியப்பர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய பொறுப்பாளர் எம்.டீ. எம். ஹாரூன், கிழக்கு மாகாண கணனி தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளர் சபை உறுப்பினர் யூ.எல்.என். ஹுதா உமர்,
பொதுச்சுகாதர பரிசோதகர் எம்.என்.எம். பஸ்லின், பாலியல் ஆரோக்கிய விசேட பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ்.எம். ஜமான்
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தேசிய சம்மேளன பிரதிநிதி சிப்னாஸ் அஸீஸ், இலங்கை ஐக்கிய சமூக முன்னணியின் செயலாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ், பொருளாளர் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








No comments: