News Just In

4/19/2021 06:47:00 PM

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் இலங்கையின் இறையாண்மை பற்றி சரிவர தெரிந்திருக்காதவரை நாட்டை நல்வழிப்படுத்துவது கடினம்!!


எப்.முபாரக்
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் இறையாண்மை பற்றி சரிவர தெரிந்திருக்காதவரை நாட்டை நல்வழிப்படுத்துவது கடினம் என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.

முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்று(19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

தேங்காய்கும் மாங்காய்கும் விற்பனை சுற்று நிறுபம் அமைக்கும் அரசாங்கம் புர நாடுகளுடன் செய்யும் ஒப்பந்தங்களில் அசட்டைத்தனமாக இருப்பது வேடிக்கையான விடயம். 69 இலட்சம் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏறியது மட்டுமல்ல 2/3 பாராளுமன்ற பெரும்பான்மையும் பெற்ற இந்த அரசு மக்களை முற்றாக திருப்திப்படுத்த தவரியுள்ளது.

சிறுபான்மை இனத்தை நசுக்கும் பகடக்காய் விளையாட்டை கை விட்டு சர்வதேச அரசியலில் முதிர்ச்சிபெறவேண்டும் இந்த அரசாங்கம் இல்லையேல் இலங்கை நாடு மிகவிரைவில் சீனாவின் தூக்கு பிள்ளையாகிவிடும் நம் நாடு.

ஜனாதிபதி கிராமங்களை சென்று பார்வையிடுவதை தவிர்த்து பல் நாடுகளுக்கு சென்று உலகமயம் படுத்தப்பட்ட அரசியலை அலசி ஆராய்வதே காலத்தின் தேவை என உணரவேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: