News Just In

4/19/2021 05:01:00 PM

கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் ஊடாக விழிப்புலன் அற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் வழங்கி வைப்பு!!


கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் ஊடாக பல்வேறு கல்வி, சுகாதார மற்றும் வாழ்வாதார செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் விசேட தேவையுடையவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் ஒன்றாக வந்தாறுமூலை பிரதேசத்தைச் சேர்ந்த இருவிழி பார்வையுமற்ற விசேட தேவையுடயவரான கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு 01ம் தரத்தில் கல்வி பயிலும் புஸ்பாகரன் தில்லையன் எனும் பல்கலைக்கழக மாணவனுக்குத் தேவையான விழிப்புலன் அற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரம் உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி மாணவனின் கல்வி செயற்பாடுகளுக்கு மிகத் தேவையாக இருந்த Braille machine எனப்படும் விழிப்புலன் அற்றவர்கள் பயன்படுத்தும் தட்டச்சு இயந்திரமானது சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியில் அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பி.துசாநந்தன் மற்றும் அமைப்பின் நிர்வாக உத்தியோகத்தர்கள் கிளோரி மற்றும் கிசாந் ஆகியோர் இதனை அம்மாணவனுக்கு வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments: