News Just In

4/19/2021 06:51:00 PM

இரண்டாம் தவணை விடுமுறையை ஒருவார காலத்தில் மட்டுப்படுத்த தீர்மானம்- கல்வி அமைச்சர்!!


2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறையை ஒருவார காலத்திற்கு மட்டுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையிலும், புலமைபரிசில் பரீட்சை ஒக்டோபர் 3 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதி வாரத்திலும் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: