News Just In

4/01/2021 05:00:00 PM

கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் டாக்டர் நாகூர் ஆரிப்க்கு பிரியாவிடை!!


(றாசிக் நபாயிஸ், மருதமுனை)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்று நோய்யியல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கல்முனைக் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் அப்பிள் பீச் ரெஸ்றுரண்டில் நேற்று (31) இரவு நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.எம்.ஜரீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்
பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் அவர்களும் விஷேட அதிதியாக மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜஹ்பர் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் (2016-2021) மார்ச் வரையான காலப்பகுதியில் தொற்று நோய்யியல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களுக்கு பிராந்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசில்களும் வாழ்த்து மடலும் வழங்கி கெளரவித்தார்கள்.

கொழும்பு டெங்கு நோய் கட்டுப்பாடுப் பிரிவுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் டாக்டர் நாகூர் ஆரிப் தனது சேவைக் காலத்தில் கல்முனைப் பிராந்தியத்தில் டெங்கு நோயை ஒழிப்பதில் அர்ப்பணிப்புடனும், தியாக உணர்வுடனும் இரவு, பகல் பாராது சிறப்பான செயற்பட்டதுடன் கொவிட்-19 கொரோனா நோய் பரவும் காலப்பகுதியிலும் அதனை தடுப்பதிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் செய்வதிலும் சுகாதார குழுவுடன் இணைந்து நேரம் பாராது தன்னால் இயலுமான சேவைகளைச் செய்து வெற்றியும் கண்டார்.








No comments: