News Just In

4/27/2021 12:06:00 PM

சற்று முன்னர் மேலும் ஒரு மாவட்டத்தின் பாடசாலைகள் அனைத்தும் பூட்டு...!!


கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து மாகாண பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 ஒழிப்பிற்கான செயலணியால் இன்றைய தினம்(27.04.2021) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை சப்பிரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாவட்டத்தில் 509 பாடசாலைகள் காணப்படுகின்றமையும் குறிப்பிடதக்கது.

No comments: