News Just In

4/27/2021 11:56:00 AM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி கைது!!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறந்துரைச்சேனையில் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவரை நேற்றிரவு கைது செய்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிசாருடன் இணைந்து சம்பவ தினமான நேற்று இரவு குறித்த வியாபாரியை பின் தொடர்ந்த வேளையில் கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற போது இக்கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த வியாபாரி நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த 42 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: