News Just In

4/27/2021 12:17:00 PM

அரச சேவையை சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானம்!!


கொரோனா வைரஸ் பரவிவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் அரச சேவையை சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக அழைப்பதற்கான சுற்றுநிருபம் இன்று முதல் இடைநிறுத்தப்படும்.

இதற்குத் தேவையான ஆலோசனைகளைத் தாம் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசின் முதலாம் இரண்டாம் அலைகளின்போது அரச சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக இவ்வாறான நெகிழ்வுத் தன்மையுடன் புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது.

வீட்டில் இருந்து பணிபுரிதல், 50 சதவீதமானோரை சேவைக்கு அழைத்தல், நிறுவனத் தலைவரின் விருப்பத்தின் பேரில் உத்தியோகத்தர்களை அழைத்தல் போன்ற முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன.

இந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான நெகிழ்வுத் தன்மையுடன் சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு அமைய அரச சேவையை முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான சுற்றுநிருபத்தை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இன்று வெளியிடவுள்ளார்.

No comments: