News Just In

4/29/2021 06:21:00 AM

நேற்று மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று; 06 பேர் உயிரிழப்பு- கொரோனா தொற்று நோயாளர்கள் 104475ஆக அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஆறு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 661 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 988 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 104,000 ஐயும் கடந்துள்ளது.

அதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 104,475 ஆக காணப்படுகிறது.

இந் நிலையில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான 227 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில், குணமடைந்தவர்களில் மொத்த தொகையும் 95,083 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,737 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 1,041 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: