News Just In

3/27/2021 12:41:00 PM

தமிழரசு மட்டு வாலிபர் முன்னணியினர் பா.உ சுமந்திரன் அவர்களுடன் கலந்துரையாடல்!!


இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் உட்பட வாலிபர் முன்னணியின் மட்டக்களப்பு நிருவாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் தேர்தலை முகங்கொடுத்தல், ஐநா வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானம், தற்போதைய அரசியல் நிலைமைகளில் தேசியம் சார்ந்து இளைஞர்களின் வகிபாகம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(துதி மோகன்)





No comments: